மரத்துடன் மோதிய மோட்டர் சைக்கிள் - தாயும் மகளும் பலி

திம்புலாகல - போகஸ்வெவ வீதியின் அரலகன்வல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

நேற்று (30) மாலை மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் பாட்டி பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

24 வயதுடைய தாயும், 2 வயதும் 4 மாதங்களுமான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தந்தையும் பாட்டியும் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரத்துடன் மோதிய மோட்டர் சைக்கிள் - தாயும் மகளும் பலி மரத்துடன் மோதிய மோட்டர் சைக்கிள் - தாயும் மகளும் பலி Reviewed by Vanni Express News on 5/01/2018 05:22:00 PM Rating: 5