கல்முனை - அக்கரைபற்று பிரதான வீதியில் விபத்து - இளைஞர் பலி

கல்முனை - அக்கரைபற்று பிரதான வீதியில் காரைத்தீவு நீர் தாங்கிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை - அக்கரைபற்று பிரதான வீதியில் விபத்து - இளைஞர் பலி கல்முனை - அக்கரைபற்று பிரதான வீதியில் விபத்து - இளைஞர் பலி Reviewed by Vanni Express News on 5/13/2018 11:43:00 PM Rating: 5