வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து புகையிரதத்தில் சிக்கிய 08 மாடுகள் உயிரிழப்பு

காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில் 08 மாடுகள் உயிரிழந்துள்ளன. 

புகையிரத குறுக்கு வீதியால் மாறும் போதே இந்த மாடுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்​தின் காரணமாக புகையிரதம் நிறுத்தப்பட்டு பிரதேசவாசிகளின் உதவியுடன் மாடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக புகையிரதம் சென்றுள்ளது. 

பிரதேசவாசிகளால் மாடுகளின் உரிமையாளரிடம் உயிரிழந்த மாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து புகையிரதத்தில் சிக்கிய 08 மாடுகள் உயிரிழப்பு வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து புகையிரதத்தில் சிக்கிய 08 மாடுகள் உயிரிழப்பு Reviewed by Vanni Express News on 5/02/2018 04:50:00 PM Rating: 5