கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து - நடந்தது என்ன ?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் நீரை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று மோதியுள்ளது.

குறித்த விமானம் லாஹூரில் இருந்து தனது பயணத்தை நிறைவுறுத்தி கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நின்றது.

இதன்போது நீரை ஏற்றிச் சென்ற பாரவூர்தி, விமானத்தின் பின் பகுதியில் மோதியுள்ள நிலையில், பாராவூர்தியை செலுத்திய சாரதியின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா, எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து - நடந்தது என்ன ? கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து - நடந்தது என்ன ? Reviewed by Vanni Express News on 5/27/2018 04:59:00 PM Rating: 5