தனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்து - பெண்ணொருவர் பலி

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

தனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ​பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

கெடஹெத்தே பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து பலத்த காயமடைந்த முச்சகரவண்டி சாரதியை மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்து - பெண்ணொருவர் பலி தனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்து - பெண்ணொருவர் பலி Reviewed by Vanni Express News on 5/29/2018 06:01:00 PM Rating: 5