மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

வெல்லவாய, தனமல்வில வீதியின் வெல்லவாய டிப்போவிற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வெல்லவாய, எதிலிவெவ பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்து தொடர்பில் சந்தேக நபரான மெதமுலான பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவரின் சடலம் வெல்லவாய வைத்தியவாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி Reviewed by Vanni Express News on 5/04/2018 04:39:00 PM Rating: 5