புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனத்தின் பின்பக்க சில்லு கழன்றமையால் விபத்து

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின், பாலாவி- தல்கஸ்கந்த பகுதியில் இன்று (09) காலை கனரக வாகனமொன்று வீதியின் நடுவே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த, தனியார் ஆலையொன்றுக்குச் சொந்தமான கனரன வாகனமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து சோள மா மூடைகளை ஏற்றிக்கொண்டு நீர்கொழும்புக்கு சென்ற போதே, குறித்த கனரக வாகனம் இன்று காலை 6.10 மணியளவில் விபத்துக்குள்ளாகியதாக, பொலிஸார் தெரிவிதத்னர்.

கனரக வாகனத்தின் பின்பக்க சில்லு கழன்றமையால், குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே குடைசாய்ந்துள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தையடுத்து சுமார் நான்கு மணித்தியாலயங்கள் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனத்தின் பின்பக்க சில்லு கழன்றமையால் விபத்து புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனத்தின் பின்பக்க சில்லு கழன்றமையால் விபத்து Reviewed by Vanni Express News on 5/09/2018 11:48:00 PM Rating: 5