கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி

கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

மாவத்தகம, வீரகெட்டிய, வாழைச்சேனை, ஹுங்கம மற்றும் வௌ்ளவத்தை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களிலேயே இவ்வாறு 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவத்தகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றும் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் வாகனம் ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் மோட்டார் வாகன ஓட்டுனர் மற்றும் அதில் பயணித்த குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை வீரகெட்டிய - பெலிஅத்த வீதியின் முல்கிரிகல பகுதியில் இன்று (21) அதிகாலை மோட்டார் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வடிகான் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் ஓட்டமாவடி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியின் ஹுங்கம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி Reviewed by Vanni Express News on 5/21/2018 05:24:00 PM Rating: 5