பேரூந்தில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில்

கம்பளை - கண்டி பிரதான வீதியின் போதலாபிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றும் தனியார் பேரூந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று மதியம் ஏற்பட்ட இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேரூந்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பேரூந்தில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் பேரூந்தில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 5/09/2018 11:19:00 PM Rating: 5