86 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

86 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் மீதொடமுல்லை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , 503 கிராம் 540 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருளும் , 66 கிராம் 56 மில்லி கிராம் கொக்கேன் போதைப்பொருளும் , 2 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளும் , டான்சின் டெப்லட் என்ற 42 மாத்திரைகளும் , 10 கைப்பேசிகளும் மற்றும் 74 ஆயிரத்து 750 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 8,628,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் வயது 25 என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நாளைய தினம் புதுக்கடை இல 3 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
86 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது 86 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது Reviewed by Vanni Express News on 5/09/2018 11:02:00 PM Rating: 5