ஹெரோயின் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைது

பண்டாரகம, றைகம பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பாணந்துறை வலய போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து 25 கிராம் 330 மில்லிகிராம் அளவான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

26 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைது ஹெரோயின் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைது Reviewed by Vanni Express News on 5/01/2018 11:10:00 PM Rating: 5