தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கவில்லை வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் - கைது

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் 21ம் இலக்க வார்டின் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் அந்தப் பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். 

நியூமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த தாய்க்கு உபகாரம் செய்வதற்காக இருந்த குறித்த மாணவன் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். 

குறித்த வைத்தியர் அதே வைத்தியசாலையில் 58ம் இலக்க வார்டில் சிகிச்சை பெறுகின்றார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கவில்லை என்றும் சரியான வார்ட்டுக்கு மாற்றவில்லை என்றும் கூறி வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்தப் பெண்ணுக்கு நோய்க்கான சிகிச்சையளிக்கப்பட்டு 21ம் இலக்க வார்டில் இருந்து 17ம் இலக்க வார்டுக்கு மற்று இருந்த போது, அதனை அறியாமல் குறித்த மாணவன் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 தரத்தில் கல்வி பயிலும் 20 வயதுடைய மாணவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கவில்லை வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் - கைது தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கவில்லை வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் - கைது Reviewed by Vanni Express News on 5/10/2018 02:26:00 PM Rating: 5