வலம்புரி ஒன்றை விற்பனை செய்வதற்காக கொண்டுசென்ற இருவர் கைது

வலம்புரி ஒன்றை விற்பனை செய்வதற்காக கிளிநொச்சியிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை வவுனியா, நொச்சிமொட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கார் ஒன்றில் வலம்புரியை கொண்டு செல்லும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வலம்புரியை ஒன்றரை கோடி ரூபாவுக்கு தம்புள்ளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வலம்புரி ஒன்றை விற்பனை செய்வதற்காக கொண்டுசென்ற இருவர் கைது வலம்புரி ஒன்றை விற்பனை செய்வதற்காக கொண்டுசென்ற இருவர் கைது Reviewed by Vanni Express News on 5/12/2018 05:53:00 PM Rating: 5