இணையத்தள விளம்பரங்களை பயன்படுத்தி சொகுசு வாகனங்கள் கொள்ளை - சந்தேகநபர் கைது

சொகுசு வாகன திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி ஆவணங்களை தயார் செய்து வாகனங்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் 33 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சீதுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்த 02 ஜீப் வண்டிகளும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் ஒன்று மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள ஜீப் வண்டி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இணையத்தளத்தில் வாகன விற்பனை சம்பந்தமாக வௌியாகின்ற விளம்பரங்களை பாரத்து, அந்த வாகனங்களை வாங்குவது போல் சென்று கொள்ளையிட்டுச் செல்வதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள விளம்பரங்களை பயன்படுத்தி சொகுசு வாகனங்கள் கொள்ளை - சந்தேகநபர் கைது இணையத்தள விளம்பரங்களை பயன்படுத்தி சொகுசு வாகனங்கள் கொள்ளை - சந்தேகநபர் கைது Reviewed by Vanni Express News on 5/10/2018 02:49:00 PM Rating: 5