24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் 56 வயதுடைய ஒருவர் கைது

24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக எடுத்துவந்த நபரொருவரை இன்று (14) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கொழும்பு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் பெறுமதியான 4 தங்ககட்டிகளை மீட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் 56 வயதுடைய ஒருவர் கைது 24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் 56 வயதுடைய ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 5/14/2018 10:56:00 PM Rating: 5