விகாரையில்13 வயதுடைய சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்

13 வயதுடைய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 68 வயதுடைய ஒருவரை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹிங்குராங்கொடை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த நபர் மாதம்பை பகுதியில் உள்ள விகாரையில் கடமைபுரிபவர் என தெரியவந்துள்ளது. 

விகாரைக்கு அருகினால் மேலதிக வகுப்பிற்கு சென்ற குறித்த சிறுவனை விகாரைக்குள் அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விகாரையில்13 வயதுடைய சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் விகாரையில்13 வயதுடைய சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் Reviewed by Vanni Express News on 5/15/2018 03:52:00 PM Rating: 5