கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் இந்திய பிரஜை கைது

ஒரு தொகை தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோகிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

54 வயதுடைய ஒருவர் இன்று காலை 08.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மேலதிக சுங்க ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய கூறினார். 

அவர் அணிந்திருந்த காற்சட்டை பையில் இருந்து 100 கிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் இந்திய பிரஜை கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் இந்திய பிரஜை கைது Reviewed by Vanni Express News on 5/19/2018 02:10:00 PM Rating: 5