நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

-ஐ. ஏ. காதிர் கான்

நீர்கொழும்பு, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் வைத்து, நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு கிலோ எடை கொண்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை, நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, திம்பிரிகஸ்கட்டுவ தொஸ்தரவத்த என்ற இடத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக, குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி அயேஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 5/02/2018 11:02:00 PM Rating: 5