கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை நேற்று (27) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (27) மாலை 5 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 274 விமானத்தில் குறிப்பிட்ட நபர் சென்னையில் நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். 

குறித்த நபர் எடுத்து வந்த பிரயாணப்பையின் கைப்பிடியில் 3 தங்க பிஸ்கட்களும் மேலும் 3 சிறிய தங்க பிஸ்கட்களும் மறைத்து வைக்கப்பட்டிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரிடம் இருந்து 225 கிராம் எடை கொண்ட 1,346,100 ரூபா பெறுமதியுடைய தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். 

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தங்க பிஸ்கட்டுக்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 250,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 5/28/2018 04:56:00 PM Rating: 5