கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துவரங்காடு, கிளிகுஞ்சிமலை பிரதேசங்களில் நேற்று (29) இரவு கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

5 கிராம் கேரளா கஞ்சாவுடன் 23 வயதுடைய துவரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவரையும், 330 போதை மாத்திரைகளுடன் 26 வயதுடைய கிளிகுஞ்சுமலை பகுதியை சேர்ந்த ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் போதைபொருட்களையும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர். 
கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது Reviewed by Vanni Express News on 5/30/2018 02:06:00 PM Rating: 5