விபசார விடுதி சுற்றிவளைப்பு - மூன்று பெண்கள் - ஆண் ஒருவர் கைது

மாத்தறை - வலஸ்முல்ல பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த விடுதி நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25, 26, மற்றும் 41 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நிலையத்தினை நடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விடுதியின் அறை ஒன்றிற்குள்ளிருந்து 24 ஆணுறைகள் காணப்பட்டதாகவும் நீண்டகாலம் பெண்கள் பணத்திற்கு விற்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவர் மற்றும் ஆண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபசார விடுதி சுற்றிவளைப்பு - மூன்று பெண்கள் - ஆண் ஒருவர் கைது விபசார விடுதி சுற்றிவளைப்பு - மூன்று பெண்கள் - ஆண் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 5/08/2018 04:10:00 PM Rating: 5