பேனா வடிவமுடைய துப்பாக்கியுடன் 5 ரவைகள் - ஒருவர் கைது

ஹொரணை – பொக்குனுவிட்ட பகுதியில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று காலை சட்டவிரோத மதுபான மோசடி தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேனா வடிவமுடைய இந்த துப்பாக்கியுடன் அதற்கு பயன்படுத்தப்படும், 5 ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

40 வயதான குறித்த சந்தேக நபர் பொக்குனுவிட்ட சிறிசுமன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் நாளைய தினம் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பேனா வடிவமுடைய துப்பாக்கியுடன் 5 ரவைகள் - ஒருவர் கைது பேனா வடிவமுடைய துப்பாக்கியுடன் 5 ரவைகள் - ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 5/31/2018 05:23:00 PM Rating: 5