13 வயதுடைய பாடசாலை மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது

தனமல்வில, செவணகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை மாணவியின் வீட்டிற்கே சென்று அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

23 வயதுடைய திருமணமான ஒருவரே செவணகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். 

கடந்த ஆண்டு பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது சந்தேகநபர் குறித்த மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 

பின்னர் இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியை வௌியில் அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் படி சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் சந்தேகநபரை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர். 

மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
13 வயதுடைய பாடசாலை மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது 13 வயதுடைய பாடசாலை மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது Reviewed by Vanni Express News on 5/03/2018 05:35:00 PM Rating: 5