14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு - 7 வயது மகனை கொலை செய்த தாய்

14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு இருந்த நிலையில் தனது ஏழு வயது மகனை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தாவை சேர்ந்த கொஸ்தோ மண்டலுக்கும் இவரது மனைவியான 28 வயதுடைய சகாரிக்கு சதன் மண்டல் என்ற 7 வயதுடைய மகன் உள்ளான். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சதன் அங்குள்ள சாக்கடையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளான். 

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் சதனின் தாய் சகாரி அவரை கொலை செய்தது தெரியவந்தது. 

இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சகாரியின் 14 வயதான உறவுக்கார சிறுவனுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 

சகாரியும், அந்த சிறுவனும் தனிமையில் இருப்பதை சதன் பார்த்துள்ளான், இதையடுத்து கோபமடைந்த அவன் இது குறித்து தந்தை கொஸ்தோவிடம் கூறுவேன் என தாயை மிரட்டியுள்ளான். 

இதனால் ஆத்திரமடைந்த சகாரி அந்த சிறுவனுடன் சேர்ந்து சதனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசியது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சகாரி மற்றும் அவர் கள்ளக்காதலனான சிறுவனையும் பொலிசார் கைது செய்துள்ளனர். 

இதனிடையில் உயிரிழந்த சதனின் சடலத்தை பார்த்து அவன் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு - 7 வயது மகனை கொலை செய்த தாய் 14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு - 7 வயது மகனை கொலை செய்த தாய் Reviewed by Vanni Express News on 5/30/2018 02:31:00 PM Rating: 5