புத்தளம் தந்த கனவான் முதல் முஸ்லிம் சபாநாயகர் கௌரவ எச்.எஸ்.இஸ்மாயில்

#கௌரவ_எச்_எஸ்_இஸ்மாயில் அவர்கள் #1901ம்_ஆண்டு_மே_மாதம்_05ம் நாள் ஹமீத் ஹுசைன் மரிக்கார்,ஆஸியா உம்மா தம்பதியினருக்கு புத்தளத்தில் பிறந்த அவர்கள் தனது ஆரம்ப கல்வி புத்தளம் சென் அந்தரூஸ் வித்தியாலயத்திலும் மேற்படிப்பை கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார் 1921ம் ஆண்டு சட்டக்கல்லூரியில் நுழைந்து 1925 ம்ஆண்டு புத்தளத்தின்

முதல் முஸ்லிம் சட்டத்தரணியாக வெளியேறினார். 

1928ம் ஆண்டு புத்தளம் உள்ளூராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தெறிவு செய்யப்பட்டதோடு தனது அரசியல் பிரவேசம் கண்ட அவர் 
1933ம் ஆண்டு புத்தளம் மாவட்ட சபையின் பிரதித் தலைவராகவும் 
பின்னர் 1939ம் ஆண்டு புத்தளம் நகர சபையாக தரம் உயர்ததப்பட்டபோது அதன் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு 1947ம் ஆண்டு வரை 8வருடங்கள் கடமையாற்றினார். இலங்கையின் முதலாவது பொது
த்தேர்தலில் புத்தளம் தொகுதியில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 

மீண்டும் 1956ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று அப்பாராளுமன்றத்தில் முதலாவது முஸ்லிம் சபாநாயகரானார். 

1959ம் ஆண்டுவரை பணியாற்றிய அவர் 1965ம் ஆண்டு அரசியலில இருந்து ஒதுங்கிக்கொண்டார். அரச சொத்துக்களை தனது சொந்ததேவைகளுக்கா பயண்படுத்தாது அரசவேலைகளுக்கு மட்டுமே பயண்படுத்தினார். 1958ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற
சபாநாயகர் மாநாட்டில் கலந்துக்கொண்டு திரும்பி வந்து செலவுகளின் பின்னரான மீதிப்பனத்தை அரசுக்கு மீள ஒப்படைத்தார். அத்தோடு அரச சலுகைகள் வாய்ப்புக்கள் பல இருந்தும் அவர் தன் தோட்டத்திற்கு சென்று வேலை செய்து தனக்கு சம்பளம் போட்டு அந்தப்பணத்தில்தான் ஹஜ்ஜுக்கும் சென்றார்.

கௌரவ மர்ஹூம் எச் எஸ் இஸ்மாயில் அவர்களின் பணி அரசியலோடு மட்டும் நின்றுவிடாது சமூகத்தின் பல வழிகளிலும் ஏற்படுத்தப்பட்டது. புத்தள மக்களின் கல்வியை நோக்காய் கொண்டு தனவந்தர்கள் நலம்விரும்களின் ஒத்துழைப்போடு புத்தளம் ஸாஹிரா கல்லூரி அங்குரார்ப்பணம் மற்றும் 1957ம் ஆண்டு பிரதமர் தகநாயக்கவின் அனுமதியோடு பைதுல்மால் நிதியம் பாரளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டமை, 1957ம் ஆண்டு அகில இலங்கை முஸ்லிம் வாளிபர் நிதியம் மற்றும் கல்வி சகாய நிதியம் அங்குரார்ப்பணம் என பல சேவைகள் செய்த மர்ஹூம் எஸ் எச் இஸ்மாயில் அவர்கள் 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி இறையடி சேர்ந்தார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.அன்னாரது நினைவாக 2003ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை அரசால் தபால் முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது. அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்திக்கொள்வானாக.
புத்தளம் தந்த கனவான் முதல் முஸ்லிம் சபாநாயகர் கௌரவ எச்.எஸ்.இஸ்மாயில் புத்தளம் தந்த கனவான் முதல் முஸ்லிம் சபாநாயகர் கௌரவ எச்.எஸ்.இஸ்மாயில் Reviewed by Vanni Express News on 5/22/2018 11:45:00 PM Rating: 5