'சக்தியுடன் றமழான்' என்பதன் பின்னாலிருக்கும் சதி!

-எஸ்.ஹமீத்

மைய்யித்து வீட்டின் சோகங்களில் பங்கெடுக்காது, முதுகு திருப்பி, வேண்டுமென்றே  மௌனமாக இருந்த 'சக்தி' கல்யாண வீட்டில் கை நனைக்க வந்திருக்கும் கபடத்தனத்தை எமது மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

சர்வதேச ஊடகங்கள் பலவும் நமது மக்களுக்கெதிரான, திட்டமிடப்பட்ட  அம்பாறை, திகன கலவரங்களை உரத்த குரலில் வெளியிட்டு  உலகறியச் செய்த போதும், உள்ளூர் ஊடகமான சக்தி காழ்ப்புணர்வோடும், கயமையோடும் ஒரு வார்த்தைதானும் பேசாது ஊமையாய் இருந்ததை நாங்கள் அத்தனை இலகுவாக மறந்துவிட மாட்டோம்.

இன்று, 'சக்தியுடன் றமழான்'  என்ற பெயரில் சால்ஜாப்புக் காட்ட முனைகிறது சக்தி. 'சக்தியுடன் றமழான்' என்னும் பெயரில் கூட மிகச் சூட்சுமமான சதி இருக்கிறது என்பதை  நம்மில் எத்தனை பேர் அவதானித்திருப்போம்?

'றமழானுடன் சக்தி' என்பதும் 'சக்தியுடன் றமழான்' என்பதும் இருவேறு முரணான அர்த்தங்களைக் கொண்டவை. இந்த அர்த்த முரண்பாடு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது; ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

சக்தியுடன் றமழான் இணைவதற்கு எங்களின் புனித றமழான் ஒன்றும் இளப்பமானதல்ல. உயிருக்குயிரான எங்களது ஐம்பெரும் கடமைகளில் ஒன்று அது. எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் எங்களுக்குப் பெரும் பரிசாக வழங்கப்பட்ட புனிதமான, அருள்மிகுந்த  றமழான் கேடுகெட்ட  சக்தியுடன் இணைவதா?

'தந்தையுடன் மகன் சென்றார்' என்பதற்கும் 'மகனுடன் தந்தை சென்றார்' என்பதற்குமிடையிலான வேறுபாடு புரிந்தவர்கள் 'சக்தியுடன் றமழான்' என்னும் பெயரில் அடங்கியிருக்கும் தந்திரத்தை, தலைகுனிவை, இகழ்வை, இழிவைப் புரிந்து கொள்வார்கள்.

இன்னுமொரு விடயம்…

சக்தி என்பது சைவ சமயப் பெண் கடவுள் ஒன்றின் பெயர்!

இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது?  
'சக்தியுடன் றமழான்' என்பதன் பின்னாலிருக்கும் சதி! 'சக்தியுடன் றமழான்' என்பதன் பின்னாலிருக்கும் சதி! Reviewed by Vanni Express News on 5/22/2018 02:51:00 PM Rating: 5