மாட்டிறைச்சி பிரச்சினை நாட்டை வறுமைப்படுத்தும்

முஸ்லிங்களும் மாட்டிறைச்சை பகிஷ்கரிப்போம். அதன் மூலம் இந்த நாட்டில் மாட்டு இறைச்சி மூலம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிங்கள் இல்லை என்பதை நிறுப்பிக்கலாம். மாட்டு இறைச்சி மூலம் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை இன மக்கள் என்பதை காலம் உணர்த்தும். பால்மா இறக்குமதி முதல் பல ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பாதிக்கப்படும் பின்னர் நாட்டின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக மாறும்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுக்கப்படுமாயின் இலங்கையில் 10 வீதத்துக்கும் குறைவாக வாழும் முஸ்லிங்கள் எத்தனை மாட்டின் இறைச்சியை சாப்பிடுகிறோம் என்பதை நன்றாக ஆராய்ந்தால் மாட்டிறைச்சி மூலம் பாதிக்கப்படுகிறார்கள் யார் என்பது தெரியவரும்.

இந்த மாட்டிறைச்சி பிரச்சினை மூலம் முஸ்லிங்களை தாக்க முனையும் இனவாத போக்குள்ளோர் நன்றாகவும் ஆழமாகவும் சிந்திக்க மறந்துள்ளனர். 

இந்த மாட்டிறைச்சி பிரச்சினை மூலம் நாட்டின் சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம் என்பன வெகுவாக பாதிக்கப்பட்டு மாற்றுவழி தேட அண்மைய நாடுகளை எமது அரசு நாடவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் இயற்கை வளம் நிறைந்த இலங்கையை அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவர் என்பதை இந்த தீவிரவாதபோக்குள்ள இனவாதிகள் அறியாமை இருப்பது அவர்களின் அறியாமையே.

மாடுகள் அறுக்கப்படாமல் விட்டால் வெகுவாக இனப்பெருக்கம் நடைபெறுவதால் 5 அல்லது 6 வருடங்களில் இலங்கை சனத்தொகையை ஒத்த மாடுகள் இலங்கையில் உருவாகும் அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மாடுகளுக்கான வைத்தியசாலை, மாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை, மாடுகளுக்கான ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

மிருகத்தை வதை செய்ய கூடாது என்று கூச்சல் இடுவோர் பால்கறக்கவும் விட மாட்டார்கள். அதன்மூலம் நிறைய மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும். இதன்மூலம் நாட்டின் சுகாதாரம் சீர்கெடும். இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாத்துறை இழுத்து மூடப்படும்.

நாட்டின் பல நிறுவனங்கலும், உள்ளுராட்சி மாற்றங்களும் வருமானம் இன்றிய நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் அண்டைய நாடுகளிடம் கையேந்தி வாழும் நிலைக்கு இலங்கை தள்ளப்படும்.

உச்ச அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஐக்கிய அமெரிக்கா ஒருவகை மான் இனத்துக்கும் இவ்வாறான தடையை அமுல்படுத்தி அதன் மூலம் அந்த நாடு அடைந்த இன்னல்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளதை யாரும் மறுக்க மாட்டார்கள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றி நாடு சோமாலியா,எத்தியோப்பியா போன்ற நாடுகளுடன் இணைந்து கொள்ளும் என்பதை இவர்கள் அறியாமலும் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு இயற்கை சங்கிலி சரியாக நடப்பதும் காலத்தின் கட்டாயம்.

நூறுல் ஹுதா உமர்
தவிசாளர்
அல் மீஸான் பௌண்டசன்,
ஸ்ரீலங்கா
மாட்டிறைச்சி பிரச்சினை நாட்டை வறுமைப்படுத்தும் மாட்டிறைச்சி பிரச்சினை நாட்டை வறுமைப்படுத்தும் Reviewed by Vanni Express News on 5/27/2018 02:58:00 PM Rating: 5