haiiii

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு - சிறுபான்மையின் தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா ?

-வை எல் எஸ் ஹமீட் (பாகம் - 2)

இது தொடர்பாக ஆராய்வதானால் கடந்தகால தேர்தல் முடிவுகளை ஆய்வுசெய்ய வேண்டும்.

முதலாவது ஜனாதிபதித் தேர்தல்-1982
————————————————-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை 1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதும் முதலாவது தேர்தல் 1982ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ம் திகதியே நடைபெற்றது. இதில் ஐ தே க சார்பில் ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் ஶ்ரீ சு க சார்பில் ஹெக்டர் கொப்பேக்கடுவையும் போட்டியிட்டார்கள். ( குடியுரிமை- civic rights- இழந்ததனால் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிடவில்லை)

இத்தேர்தலில் 81.06% மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஜே ஆர் 3,450,811 வாக்குகள் ( 52.91%), கொப்பேக்கடுவ 2,548,438 (39.07%) வாக்குகள் பெற்றிருந்தார்கள். அப்பொழுது முஸ்லிம் கட்சிகள் அரசியல் அரங்கில் இருக்கவில்லை. எனவே கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஜே ஆரிற்கே வாக்களித்தார்கள்.

ஜே ஆர் அண்ணளவாக 3% வாக்குகளையே மேலதிகமாக பெற்றதனால் சிறுபான்மை வாக்குகள், குறிப்பாக முஸ்லிம் வாக்குகள் அவருக்குத் தேவையான 50% ஐ வழங்குவதில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தைச் செலுத்தியது; என்பது ஊகிக்கக்கூடியது. அதாவது முதலாவது தேர்தலே ஜனாதிபதியாக ஒருவர் தெரிவுசெய்யப்படுவதற்கு சிறுபான்மை வாக்குகள் இன்றியமையாதவை; என்ற ஓர் அபிப்பிராயத்தைத் தோற்றுவித்தது.

இரண்டாவது தேர்தல்
—————————-
இது 1988ம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி நடைபெற்றது. வாக்களிப்பு விகிதம் 55.32 பிரதான போட்டியாளர்கள் - திரு ஆர் பிரேமதாச, திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக.
பிரேமதாச- 2,569,199 (50.43%), ஶ்ரீமா- 2,289,860 (44.95%)

இத்தேர்தலின்போது மு கா தோற்றம் பெற்றிருந்தது. அது திரு பிரேமதாசவையே ஆதரித்தது. இங்கும் பெரும்பான்மை முஸ்லிம்கள் பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். திரு பிரேமதாச, 50% சற்றே தாண்டியிருந்ததால் இங்கும் சிறுபான்மை வாக்குகள், குறிப்பாக முஸ்லிம் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் கணிசமான பங்களிப்பைச் செய்திருப்பது கண்கூடு. இத்தேர்தல் சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட முடியாது; என்ற அபிப்பிராயத்தை மேலும் வலுப்படுத்தியது.

மூன்றாவது தேர்தல்
—————————
இத்தேர்தல் 1994ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்றது. வாக்களிப்பு வீதம் 70.47 ஆகும். பிரதான போட்டியாளர்கள்- சந்திரிகா பண்டாரநாயக்க, ஶ்ரீமா திசாநாயக்க.
முன்னையவர் பெற்ற வாக்குகள் 4,709,205 (62.28%), பின்னையவர்- 2, 715,283 (35.91).

இத்தேர்தல் சற்று வித்தியாசமான சூழ்நிலையில் இடம்பெற்ற தேர்தலாகும். காமினி திசாநாயக்க கொல்லப்பட்ட நிலையில் அனுதாப வாக்கை எதிர்பார்த்து அவரது மனைவி போட்டியிட நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்களால் அவர் ஒரு பலமான போட்டியாளராக பார்க்கப்படாததும் அதேநேரம் பாராளுமன்ற பெரும்பான்மை ( மு கா வுடன் இணைந்து) சந்திரிக்காவிடம் இருந்ததும் இந்தப் பெரும்பான்மைக்கு பிரதான காரணங்களாகும். அவர் அரசியலில் புதிதாக இறங்கியதால் ஒரு கவர்ச்சியும் ஐ தே க, 17 வருடங்கள் தொடராக ஆட்சியில் இருந்ததால் மக்கள் மத்தியில் ஒரு சடைவு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தல் சிறுபான்மைகளின் வாக்குகளில்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெறுவதற்குத் தேவையான 50% ஐ அல்லது அண்ணளவாக 50% ஐ பெரும்பான்மை சமூகம் வழங்கிய ஒரு தேர்தல் என்பதால் இதனை சற்று விரிவாக ஆராய வேண்டும்.

இத்தேர்தலில் சந்திரிக்கா பெற்ற வாக்குகள் 62 விகிதம். இதில் சிறுபான்மைகளின் வாக்குகள் 12% இற்கு உட்பட்டவையாயின் சிறுபான்மைகளின் வாக்கின் தேவையில்லாமல் சந்திரிக்கா வெற்றிபெற்றார்; என்பது பொருளாகும். 12% விட அதிகமாயின் சிறுபான்மைகளின் வாக்கின்றி அவரால் வெற்றிபெற முடிந்திருக்காது; என்ற முடிவுக்கு வரலாம்.

தமிழர்களின் வாக்களிப்பை முதலில் பார்ப்போம்
————————————————————-
வடக்கு
————

யாழ் மாவட்டம்
சந்திரிக்கா- 16,943 வாக்குகள்
ஶ்ரீமா திசாநாயக்க- 341 வாக்குகள்

வன்னி மாவட்டம்
சந்திரிக்கா-33,585 வாக்குகள்
ஶ்ரீமா- 4,493 வாக்குகள்

சந்திரிக்கா- மொத்த வாக்குகள் - 50,519
இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1.07% ஆகும்.

கிழக்கு
———-
மட்டக்களப்பு மாவட்டம்
சந்திரிக்கா- 144,725
ஶ்ரீமா- 14, 812
இங்கும் தமிழர்களின் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பதை ஊகிக்கலாம். இதில் அண்ணளவாக பாதி வாக்குகள் முஸ்லிம்களின் வாக்குகளாகும்.

திருகோணமலை மாவட்டம்
சந்திரிகா-75,242
ஶ்ரீமா- 26,860
இது மூன்று சமூகங்களும் இணைந்து அளித்த வாக்குகள். இங்கு முஸ்லிம்களின் வாக்குகளே அதிகமாக சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திகாமடுல்ல மாவட்டம்
சந்திரிகா- 168,289
ஶ்ரீமா-59,074
இங்கும் மூன்று சமூகங்கள். மு கா சந்திரிகாவை ஆதரித்த நிலையில் முஸ்லிம் வாக்குகளே இவற்றில் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் மொத்தக் கிழக்கில் இருந்தும் ஒரு ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழ் வாக்குகள் அறிக்கப்பட்டிருக்கலாம். இது சுமார் 2% ஆகும்.

எனவே, வட கிழக்கில் ஓட்டுமொத்த தமிழ் வாக்குகள் சுமார் 3% சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.

முஸ்லிம் வாக்குகள்
————————-
மு கா சந்திரிக்காவை ஆதரித்ததனால் கிழக்கில் பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகள் சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டன. வட- கிழக்கிற்கு வெளியே பாரம்பரியமாக ஐ தே கட்சிக்கு வாக்களிக்கும் முஸ்லிம்கள் சந்திரிக்காவுக்கு பெரும்பான்மையாக வாக்களித்திருக்க வாய்ப்பில்லை.

புள்ளிவிபர ரீதியாக இதனை தெளிவாக கூறமுடியாது; ஏனெனில் இனரீதியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதில்லை. மொத்த முஸ்லிம்களில் 50% சந்திரிக்காவுக்கு வாக்களித்ததாகக் கருதினாலும் அது 4 தொடக்கம் 5 வீதத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். மலையகத்தமிழர்களின் வாக்குகள் ஒரு மூன்று வீதம் என்று வைத்துக்கொண்டாலும் மொத்த சிறுபான்மை வாக்குகள் சுமார் பத்து வீதமே. எஞ்சிய இரண்டு வீதத்தையும் சிறுபான்மை வாக்குகளாகக் கருதினாலும் 50% சிங்களவர்களுடைய வாக்குகள் என்பது தெளிவாகும்.

எனவே, சிறுபான்மைகளின் வாக்குகளின் தேவையில்லாமல் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் முடிவு, ஒருவர் சிறுபான்மைகளின் வாக்குகள் இல்லாமல் ஒருபோதும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட முடியாது; என்ற கருதுகோளை பொய்யாக்கி, சிறுபான்மைகளின் வாக்குகள் இல்லாமல் தெரிவுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் சாத்தியமானதே! என்பதை நிரூபித்தது.

அதாவது, பெரும்பான்மை சமூகம் தேவைப்படின் 50% வாக்குகளை வழங்குவதற்கு ஒற்றுமைப்பட முடியாதவர்கள் அல்ல; காரணங்கள் எதுவாயிருந்த போதிலும்; என்பதை முதலாவது நிரூபித்த தேர்தல் இதுவாகும்.

தொடரும்............

 நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா ? பாதகமா ? (பாகம் - 1)

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4869,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11140,கட்டுரைகள்,1392,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3248,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு - சிறுபான்மையின் தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா ?
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு - சிறுபான்மையின் தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா ?
https://2.bp.blogspot.com/-OAc9-OkwmvY/Ww0bLXbut7I/AAAAAAABLKw/tEjl7_zfeHkxwT3G__gsiYDBKBvf9izIwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-OAc9-OkwmvY/Ww0bLXbut7I/AAAAAAABLKw/tEjl7_zfeHkxwT3G__gsiYDBKBvf9izIwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/05/article_29.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/05/article_29.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy