சர்வதேச ரீதியில் பிரபல்யமான குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் - அமேசன் கல்லூரி

-சில்மியா யூசுப்

சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான பயன்மிக்க பாடநெறியே  Brain Gym  ஆகும். அத்தோடு இப்பயிநெறிக்கு விசேடமாக ஐக்கிய இராச்சியத்தின் துறைசார் நிபுணர்களின் அமைப்பின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

Brain Gym என்ற இந்தப் பாடநெறி குழந்தையின் மூளையை விருத்தியடைய செய்தலும் மற்றும் திறமையான  ஆற்றல்களை வெளிப்படுத்த செந்தலும்  இப் பாடநெறியின் முக்கிய நோக்கமாகும்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் அந்த வகையில் இன்றைய சிறுவர்கள் நாளைய திறமை வாய்ந்த தலைவர்களாக உருவாக்குவது பெற்றோர்கள் மற்றும் ஆசான்களிள் கடமையாகும்.

ஆசான்கள் என்போர் மாணவர்களுக்கு முக்கியமானோர் ஏனெனில் பிள்ளைகளுக்கு மிகவும் நுணுக்கமான பல நுட்ப முறையில்  அவர்களின் மூளைக்கு பதிவிட செய்வதற்கு ஆசான்களே நுட்ப முறைகளை கையாண்டு கற்பித்து கொடுக்க வேண்டும்.

இதனை கருத்திற்கொண்டு கொழும்பு அமேசன் கல்லூரி திறமை வாய்ந்த  மாணவர்களை எம் சமுதாயத்திற்கு உருவாக்கும் நோக்கில் பல பிரதேசங்களில் இப் பாடநெறி செயற் திட்டத்தை வழங்கி வருகின்றது.அது மட்டுமல்லாது  நீங்களும் உங்கள் பிரதேசங்களில் இச் பாட செயற்திட்டத்தை ஆரம்பிக்க விரும்பினால் ஒரு நாள் பயிற்சி நெறியில் இணைந்து உங்களது பிரதேசத்திலே தொடர  முடியும்.

 மேலும் இதற்கான பல கற்றல் உபகரணங்கள் மற்றும் ஏனைய உதவிகள் எமேசன் உயர்கல்வி நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்படும்.

இப்பாடநெறியானது வாரத்திற்க்கு ஒரு முறை இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே கற்பிக்கப்படும். அத்தோடு சாதாரண விடயங்களை போலல்லாது மிகவும் நேர்த்தியாக்கப்பட்டு கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க கூடிய ஆற்றல்கள் உள்ளவராக இருப்பார்கள்..

மேலும் இப்பாடத்திட்டத்தில் பெற்றோர்களுக்கான தனிப்பட்ட முறையில் குழந்தை உளவியல் ஆலோசனை எம் கல்லூரி இயக்குனர் உளவள ஆலோசகர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்களால் வழங்கப்படும்..

அத்தோடு கல்வி வழிகாட்டல் மற்றும் குழந்தைகளின் மூளைக்கு தேவையான உணவு பழக்க வழக்கங்கள், குழந்தைகளுக்கு பல பிரயோசனமான தகவல்கள் போன்ற பல  உளவியல் ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்..

இப் பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும்..

மேலும் எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் இப்பாட நெறிக்கான வகுப்புக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் இப்பயிற்சி நெறியில் ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் பிள்ளைகளை இணைத்துக் கொள்ள முடியும்..

மேலதிக தகவல்களுக்கு - 0778800034
சர்வதேச ரீதியில் பிரபல்யமான குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் - அமேசன் கல்லூரி சர்வதேச ரீதியில் பிரபல்யமான குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் - அமேசன் கல்லூரி Reviewed by Vanni Express News on 5/22/2018 11:05:00 PM Rating: 5