ஜெமீலின் இருப்பு அவசியம்! சதிகாரர்களை துரத்துவோம்!!

-ஏ.எச்.எம். பூமுதீன்

20 இலட்சம் முஸ்லீம்களுக்கு இரண்டு  முஸ்லிம் கட்சிகள் அவசியமற்றது என் உணர தலைப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம்-  ஒரு கட்சி போதுமானது என்று தீர்மானித்து விட்டதன் எதிரொலிதான் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்ற அமோக வெற்றியாகும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையை பரிபூரணமாக ஏற்று அங்கீகரித்துள்ள முஸ்லிம் சமூகம் எதிர்வரும் தேர்தல்களில் - இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பக் கூடிய ஒரே முஸ்லிம் கட்சி மக்கள் காங்கிரஸ்தான் என்ற இறுதிப் பிரகடணத்தை செய்ய தயாராகி வருகின்றார்கள் .

அப்படிப்பட்ட அந்தக் கட்சியை - அவ்வாறானதொரு நிலைமை மக்கள்  காங்கிரஸுக்கு ஏற்பட்டு விடக் கூடாது- அந்தக் கட்சியின் தலைமையான ரிஷாத்தை பலமிழக்க செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சி இன்று படு வேகமாக கட்சிக்கு வெளியிலும், அதேவேளை துரதிஷ்டவசமாக கட்சிக்குள்ளும் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் - மர்ஹும் அஷ்ரப் காலம் தொட்டு இன்று ரவூப் ஹக்கீம் காலம் வரை பிரதானமாக 20 பாரிய பிளவுகளை அல்லது வெளியேற்றங்களை சந்தித்து பாரிய வீழ்ச்சியை இன்று கண்டுள்ளது. இதேபோன்றதொரு வீழ்ச்சியை மக்கள்  காங்கிரஸுக்கும் ஏற்படுத்துவதுதான் மேற்சொன்னோரின் சதி திட்டம் என்பது தற்போது மெல்லக் கசியத் தொடங்கியுள்ளது.

மக்கள் காங்கிரஸின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின்- கட்சி விலகலுடன் ஆரம்பமான அந்த செயற்பாடு பின்னர் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா என தொடர்ந்து கிழக்கின் முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர், முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி ஆகியோரின் வெளியேற்றத்தை  அடுத்து கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹமீத்
வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஆனாலும், இவர்கள் அத்தனை பேரும் ஏதோவொரு வகையில் மக்கள்  காங்கிரஸின் வளர்ச்சிக்காக நிறைய அர்ப்பணிப்புக்களை செய்தவர்கள் என்பதை விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டிய  கடப்பாடும் உள்ளது.

இத்தனை பேரினதும் வெளியேற்றத்துக்கு பின்னால் ஒளிந்திருப்பது அல்லது கட்சியை பலவீனப்படுத்த திரைமறைவில் சதி செய்தது கட்சிக்குள் இருக்கும் ஓரிருவர் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து ஒட்டுமொத்த கட்சி போராளிகளிடமும் இருக்காது என்பது தான் எனது அபிப்பிராயம்.

அதே குள்ள நரி கூட்டம்தான் இப்போதும்- முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதித் தலைவரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருக்கின்ற ஜெமீலையும் கட்சியையும் தலைமையை விட்டும் தூரமாக்குகின்ற செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர்  என்ற கசப்பான உண்மையையும் இந்த இடத்தில் கூறித்தான் ஆக வேண்டும் .

முகா வை விட்டு விலகி - மக்கள்  காங்கிரஸில் ஜெமீல் இணைந்து கொண்டமை என்பது முகா வை பொறுத்தவரைக்கும் பெரும் இழப்புத்தான். அதேபோன்று அம்பாரை மாவட்டத்தை பொறுத்த வரை மக்கள்  காங்கிரஸுக்கு பலம்தான். அம்பாரை மாவட்டத்தின் கட்சியின் முழுமையான அரசியல் அதிகாரம் ஜெமீலுக்கு வழங்கப்பட்டால் கட்சி மேலும் பலமடையும் என்ற போராளிகளின் கருத்தையும் இங்கு மறுதலிக்கவும் முனையக் கூடாது.

மக்கள்  காங்கிரஸில் நான் அந்தப் பதவி, இந்தப் பதவி என்று தங்களுக்குத்தானே கூப்பாடு போட்டுத் திரிவோரை கட்டுப்படுத்தி ஆளுமையுள்ள ஜெமீல் போன்றோரிடம் அம்பாரை மாவட்ட பலத்தையும் வழங்கினால் கட்சி இன்னும் பலமடையும் - கட்சித் தலைவருக்கும் அது ஒரு ஆறுதலாக அமையும்  என்ற போராளிகளின் கருத்தையும் சிந்தனைக்கு எடுக்க வேண்டிய கடப்பாடும் கட்சிக்குள்ளது.

கட்சிக்கும் தலைமைக்கும் யாரெல்லாம் விசுவாசமாக இருக்கின்றார்களோ அவர்களை தூரப்படுத்துகின்ற, இல்லாத பொல்லாத அவதூறுகளைக் கூறி குறித்த நபருக்கு போனஸ் ஆசனம் கூட கிடைக்க விடாமல் செய்கின்ற போன்ற கேவலமான செயற்பாடுகளில் ஈடுபடும் அந்த கூட்டத்திடமிருந்து கட்சியை பாதுகாக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.

இதுபோன்றதொரு குள்ளரி கூட்டத்தினால்தான் இன்று முகா செல்வாக்கு இழந்து, அதன் உண்மையான கொள்கை இழந்து இன்று பலவீனமடைந்துள்ளது. மர்ஹும் அஷ்ரப் காலத்து கட்சி யாப்பு இன்று முகாவிடம் இல்லை என்பதும் ஒரு முக்கிய குறிப்பு.

ஆக, ௧ட்சியையும் தலைமையையும் பலவீணப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் அந்த  ஓரிரு துரோகிகளையும் துரத்தியடித்து கட்சியையும் தலைமையையும் பாதுகாக்க , பலப்படுத்த போராளிகள் அணைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இன்று கணிந்துள்ளது.
ஜெமீலின் இருப்பு அவசியம்! சதிகாரர்களை துரத்துவோம்!! ஜெமீலின் இருப்பு அவசியம்! சதிகாரர்களை துரத்துவோம்!! Reviewed by Vanni Express News on 5/15/2018 11:00:00 PM Rating: 5