பொட்டு வைக்கும் உரிமையை தமிழ் பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த மாமனிதர் அஷ்ரப்

1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் ஒரு சம்பவம். செய்தி வாசிக்கும் போது யாரும் தமது மத அடையாளத்தை வெளிக்காட்ட கூடாது என்று ஒரு உத்தரவு கூட்டுத்தாபனத்தின் மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. இதனால் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து கொண்டு செய்தி வாசிக்க தடை ஏற்படுகிறது.

இதற்கெதிராக குரல் எழுப்ப ஆளுங்கட்சியில் தமிழ் சமூகம் சார்ந்த அமைச்சர் யாரும் இருக்கவுமில்லை. அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய SLMC ன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் துணிந்தார், நியாயங்களை எடுத்துக்கூறி தமிழ் பெண்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார். இந்த செயல் SLMC க்குள்ளே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களுக்காக உழைத்தார் என்று. கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதற்கான பதிலையும் வழங்கினார். அவர் சொன்னார் ' தமிழர்களுக்கு கிடைக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது'. இந்த பதிலால் சர்ச்சையும் அடங்கியது.

தலைவர் அஷ்ரப் எங்கே? ஐயா சம்பந்தன் எங்கே? அவரல்லவோ தலைவர்.

H. M. RAHMATHULLAH
பேருவளை
பொட்டு வைக்கும் உரிமையை தமிழ் பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த மாமனிதர் அஷ்ரப் பொட்டு வைக்கும் உரிமையை தமிழ் பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த மாமனிதர் அஷ்ரப் Reviewed by Vanni Express News on 5/06/2018 05:12:00 PM Rating: 5