ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை தாக்குதல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

மாணவர்களை கலைப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைகழக மாணவர்களால் இன்று மதியம் முதல் கொழும்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்படுகிறது. 

இதன்காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை தாக்குதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை தாக்குதல் Reviewed by Vanni Express News on 5/09/2018 10:31:00 PM Rating: 5