டோனியின் அதிரடி ஆட்டத்தினால் காம்பீரை கடந்து சாதனை படைத்தார்

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 22 பந்தில் 51 ஓட்டங்களை எடுத்தார். 

13-வது ஓட்டத்தை எடுத்தபோது தலைவர் பதவியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் என்ற சாதனையை டோனி படைத்தார். அவர் காம்பீரை முந்தி முதலிடம் பிடித்தார். 

டோனி ஐபிஎல் தலைவர் பதவியில் 151 ஆட்டங்களில் 3556 ஓட்டங்கள எடுத்துள்ளார். காம்பீர் 129 ஆட்டத்தில் 3518 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டோனி மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசையில் தான் களம் இறங்குவார். இந்த வரிசையில் வந்து அவர் தலைவர் பதவியில் அதிக ஓட்டங்கள எடுத்து சாதனை படைத்தது மிகப்பெரிய வி‌ஷயமாக கருதப்படுகிறது.
டோனியின் அதிரடி ஆட்டத்தினால் காம்பீரை கடந்து சாதனை படைத்தார் டோனியின் அதிரடி ஆட்டத்தினால் காம்பீரை கடந்து சாதனை படைத்தார் Reviewed by Vanni Express News on 5/01/2018 05:31:00 PM Rating: 5