ஸ்மித் மற்றும் வோர்னருக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு..!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னருக்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். 

இதில் ஸ்மித், வோர்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வோர்னரால் அவுஸ்ரேலிய அணிக்காக விளையாட முடியும் என கூறி வரும் இந்நிலையில் கிளப் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித், வோர்னருக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்மித் மற்றும் வோர்னருக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு..! ஸ்மித் மற்றும் வோர்னருக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு..! Reviewed by Vanni Express News on 5/12/2018 05:08:00 PM Rating: 5