அசத்தலான துடுப்பாட்டத்துடன் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா..!

ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கொல்கத்தா அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சுனில் நரைன் 36 பந்துகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 75 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை தனது பங்கிற்கு ரஷல் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பாரிய வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டுகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாகக் ராஹுல் 29 பந்துகளில் 66 ஓட்டங்களையும் அஸ்வின் 22 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரஷல் 3 விக்கட்டுக்களையும் பிரதிஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளைப் பெற்று கொல்கத்தா அணி நான்காவது இடத்துக்கு முன்னேறி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
அசத்தலான துடுப்பாட்டத்துடன் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா..! அசத்தலான துடுப்பாட்டத்துடன் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா..! Reviewed by Vanni Express News on 5/13/2018 11:28:00 PM Rating: 5