மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்..!

மும்பை அணிக்கெதிராக இன்றைய தினம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணி இலகு வெற்றிபெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இன்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவிக்க, பின்னர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி மும்பை அணியை 168 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

மும்பை அணிசார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிவிஸ் அதிகபட்சமாக 42 பந்துகளுக்கு 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஜொப்ரா ஆர்ச்சர் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து.

ராஜஸ்தான் அணியின் சார்பில் பட்லர் அதிரடியாக ஆடி 53 பந்துகளுக்கு 94 ஓட்டங்களை விளாசி அசத்தினார்.

இதன்படி வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணி மும்பை அணியை பின்தள்ளி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது
மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்..! மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்..! Reviewed by Vanni Express News on 5/14/2018 11:47:00 PM Rating: 5