மிக நீண்ட தூர சிக்ஸர் அடித்த ஐபிஎல் வீரர்

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் குவித்தது. 

தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

பெங்களூரு அணியில் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 69 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தாலும், அதையும் மைதானத்துக்கு வெளியில் அனுப்பினார் டி வில்லியர்ஸ். 

106 மீட்டர் தூரத்துக்கு அடிக்கப்பட்ட அந்த சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதுவே இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய சிக்ஸராகும். 

இந்த பட்டியலில் முதல் மற்றும் ஐந்தாவது இடத்திலும் டி வில்லியர்ஸ் தான் உள்ளார். அவர் சமீபத்தில் நடந்த மற்றொரு போட்டியில் 111 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸரை அடித்தார். அந்த முறையும் பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேபடன் டோனி அடித்த 108 மீட்டர் சிக்ஸர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மிக நீண்ட தூர சிக்ஸர் அடித்த ஐபிஎல் வீரர் மிக நீண்ட தூர சிக்ஸர் அடித்த ஐபிஎல் வீரர் Reviewed by Vanni Express News on 5/18/2018 11:52:00 PM Rating: 5