கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, அவுஸ்திரேலியகிரிக்கெட் சபையால் தடைவிதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும்எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதிஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20கனடா லீக் தொடரில்பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர்மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்குதிரும்பவுள்ளார்.

கேப்டவுனில் நடந்த பந்தைசேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து12 மாதங்கள் போட்டித் தடைவிதிக்கப்பட்ட ஸ்மித்துக்கு,அவுஸ்திரேலியாவுக்கு வெளியில்உள்நாட்டு போட்டிகளில் ஆடஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைஅனுமதி அளித்தது.  

இதன்படி அவர் சக நாட்டு வீரரானகிறிஸ் லியோன், அதேபோன்றுசர்வதேச நட்சத்திரங்களான கிறிஸ்கெயில், அன்ட்ரூ ரஸ்ஸல், ஷஹிட்அப்ரிடி, டர்ரன் சமி, லசித் மாலிங்க,சுனில் நரைன், டேவிட் மில்லர்மற்றும் ட்வைன் பிராவோஆகியோருடன் ஒரு மாதம் நீடிக்கும்இந்த தொடரில் பங்கேற்கவுள்ளார்.  

இந்த தொடரில் பங்கேற்பது குறித்துடேவிட் வோர்னரும் சமிக்ஞைகள்காட்டியுள்ளார். 

இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக செயற்பட்ட லசித் மாலிங்க கடந்த காலங்களில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு இலங்கை அணியில் இடம்பெறாமல் இருந்தார். எனினும், காயத்தில் இருந்து மீண்ட பின்னர் அவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில், தான் சுமார் ஒரு தசாப்த காலமாக விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாயப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

முன்னர் மாலிங்கவை தமது அணியில் இருந்து விடுவித்த மும்பை நிர்வாகம், பின்னர் இடம்பெற்ற ஏலத்திலும் அவரை தமது தரப்பிற்கு எடுக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில், அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் ஏனைய எந்தவொரு அணியினராலும் எடுக்கப்படாமை அதிர்ச்சியளிக்கும் விடயமாக இருந்தது. எனினும், இறுதியில், அவரை தமது பந்து வீச்சு ஆலோசகராக இணைப்பதற்கு மும்பை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறான ஒரு நிலையில், ஐ.பி.எல் தொடர் இடம்பெறும் அதே காலப்பகுதியில் இலங்கை வீரர்களின் திறமையை பரிசோதிப்பதற்காக உள்நாட்டில் சுபர் ப்ரொவின்சியல் தொடர் என்ற பெயரில் மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் ஆரம்பமாகியது. குறித்த தொடரில் மாலிங்க விளையாடினால் மாத்திரமே அவரை தேசிய அணிக்கும் மீண்டும் இனைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியுமு் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்பொழுது மாலிங்க கனடாவில் இடம்பெறும் க்ளோபல் T20 கனடா கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

க்ளோபல் T20 கனடா தொடர், ஐந்துகடனா நகரங்களைபிரதிநிதித்துவப் படுத்தும்வகையில் ஆறு அணிகளைக்கொண்டு அமையவுள்ளது. இதில்எட்மொன்டன் ரோயல்ஸ்,மொன்ட்ரியல் டைகர்ஸ்,டொரொன்டோ நஷனல்ஸ்,வன்கூவர் நைட்ஸ் மற்றும்வின்னிபேக் ஹவுக்ஸ் என்றஅணிகளுடன் ஆறாவதாகமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டைபிரதிநிதித்துவப் படுத்தும்வகையில் ஒட்டுமொத்தமாககரீபியன் பிராந்திய வீரர்களைக்கொண்ட அணியும்பங்கேற்கவுள்ளது. மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் சபையுடனானஉத்தியோகபூர்வ கூட்டணியின் ஓர்அங்கமாகவே இந்த அணியும்தொடரில் ஆடவுள்ளது.  

‘க்ளோபல் T20 கனடா தொடர்வெற்றி அளிக்க மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் சபை சார்பில்நான் வாழ்த்துகிறேன்‘ என்று அந்தகிரிக்கெட் சபையின் தலைவர் டேவ்கெமரூன் குறிப்பிட்டார்.   

‘இதுபோன்ற லீக் போட்டிகள் மற்றும்தொடர்களிலேயே எமதுபிராந்தியத்தின் வளர்ச்சிபெரும்பாலும் தங்கியுள்ளது. நாம்கனடா கிரிக்கெட்டுக்கு ஆதரவைவழங்கி எதிர்காலத்தில் இதனைவிடவும் நெருக்கமாக பணியாற்றஎதிர்பார்த்துள்ளோம்‘ என்று அவர்குறிப்பிட்டார்.

வரும் மே 31 ஆம் திகதிநடைபெறவிருக்கும் ஆரம்பக்கட்டவரைவு ஒன்றின் மூலம்அணிகளுக்கு வீரர்கள்இணைக்கப்படவுள்ளனர்.கனடாவின் 23 வயதுக்கு உட்பட்டவீரர்கள் உள்ளடங்கலாக கனடாவீரர்களின் நான்கு பட்டியல்கள்இந்த தொடரில் ஒதுக்கப்பட்டுள்ளன.

22 லீக் போட்டிகளைக் கொண்டஇந்த தொடரின் இறுதிக் கட்டமாகபிளே ஓப்ஸ் (Playoff) மற்றும்சம்பியன் போட்டி ஜூலை 16 ஆம்திகதி நடைபெறும். அனைத்துப்போட்டிகளும் வடக்குடொரொன்டோவில் உள்ளகிரிக்கெட் போட்டிகளுக்கானவசதிகள் கொண்ட மபிள் லீப்கிரிக்கெட் கழக மைதானத்தில்நடைபெறவுள்ளன. இங்கு 7,000பேருக்கு போட்டிகளை பார்க்கும்வசதி உள்ளது.  

‘க்ளோபல் T20 கனடாதொடரின்மூலம், இணைஅங்கத்துவ நாடு ஒன்றால் லீக்தொடர் ஒன்று நடத்தப்படுவது முதல்முறையாக அமையவுள்ளது.கிரிக்கெட்டின் உலகளாவியமுன்னேற்றத்திற்கு இது ஒருமுக்கிய படியாக உள்ளது‘ என்றுகனடா கிரிக்கெட் சபையின்தலைவர் ரஞ்ஜித் சய்னிகுறிப்பிட்டார்.

‘கனடா கிரிக்கெட் ரசிகர்களுக்கு பலசர்வதேச வீரர்களையும்நெருக்கமாக பார்ப்பதற்குசந்தர்ப்பமாக இதுஅமையவிருப்பதோடு, கனடாகிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவும்சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்,மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைமற்றும் சர்வதேச கிரிக்கெட்சமூகத்தினருக்கு நன்றியைதெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்‘ என்றும் அவர்குறிப்பிட்டார்.

டேவிட் வோர்னர் மற்றும் கெமரூன்பான்க்ரொப்ட் ஆகியோர் கிரிக்கெட்போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவதுகடந்த இரண்டு வாரங்களில்உறுதியான நிலையில் ஸ்மித்தின்வருகை எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் விரைவாகஇடம்பெறவுள்ளது.  

அவுஸ்திரேலியாவின் ஏனையமாநிலங்கள் அவுஸ்திரேலியகிரிக்கெட் சபை வழங்கியதடைகளை நீடித்தபோதும் மேற்குஅவுஸ்திரேலிய மாவட்ட கிரிக்கெட்சங்கம் பான்க்ரொப்ட் ஆட சிறப்புஅனுமதி அளித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2018-19 பருவத்தில்டேவிட் வோர்னர் சிட்னியின்ரான்ட்விக் பீட்டர்ஷாம்கழகத்திற்காக ‘முதல் மூன்றுஅல்லது நான்கு போட்டிகளில்அடுவார்‘ என்று அந்த கழகத்தின்தலைவரும் முன்னாள்அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளருமான மைக் விட்னிதெரிவித்துள்ளார்.  

அவர் வருவதை ஒட்டி அனைவரும்உற்சாகம் அடைந்துள்ளனர்.உடைமாற்றும் அறையில் அவர்இருப்பது இளம் வீரர்களுக்குசிறந்ததாக அமையும்‘ என்றும் அவர்குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவுடனானபோட்டியில் சர்ச்சைக்குரிய அவரதுபங்களிப்புக்காக ஸ்மித்துடன்வோர்னருக்கும் 12 மாத போட்டித்தடை விதிக்கப்பட்டது. எனினும்முன்னாள் அணித்தலைவரானஅவருக்கு அவுஸ்திரேலியஅணிக்காக மீண்டும் ஒருபோதும்தலைவராக செயற்பட முடியாது.
கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க Reviewed by Vanni Express News on 5/27/2018 12:40:00 AM Rating: 5