இலங்கை அணியின் பிரபல வீரர் இனி பந்து வீச மாட்டார்..!

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவரும் சகல துறை வீரருமான ஏஞ்சலோ மெத்திவ்ஸ் பந்து வீச்சில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கட்டின் தேர்வு குழு தலைவர் கிரேம் லெப்ரோய் இதனை தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரர்கள் தொடர்ந்து உபாதைக்கு உள்ளாவதை தடுக்கும் முகமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி , எதிர்வரும் ஒருநாள் , டெஸ்ட் மற்றும் T20 போட்டித் தொடர்களில் மெத்திவ்ஸ் பந்து வீச்சில் ஈடுபட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் பிரபல வீரர் இனி பந்து வீச மாட்டார்..! இலங்கை அணியின் பிரபல வீரர் இனி பந்து வீச மாட்டார்..! Reviewed by Vanni Express News on 5/10/2018 11:48:00 PM Rating: 5