மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளராக முஷ்டாக் நியமனம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடது பக்க சுழல் பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹமது. 47 வயதான இவர், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். 

அவரது பயிற்சி காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அவரது காலம் வரும் ஜூலை மாதத்தில் இருந்துதான் நீட்டிக்கப்படும். 

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் குறுகிய கால சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஒரு மாதமே ஆகும். பின்னர் நீண்ட கால பயிற்சியாளராக மாற வாய்ப்புள்ளது. 

முஷ்டாக் அஹமது ஏற்கனவே 2016 முதல் 2017 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளராக முஷ்டாக் நியமனம் மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளராக முஷ்டாக் நியமனம் Reviewed by Vanni Express News on 5/09/2018 10:50:00 PM Rating: 5