ஐபிஎல் சாதனை ஏராளம் இருக்கலாம் அதில் சுரேஷ் ரெய்னாவின் சாதனை இது

ஜெய்பூர் : ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னையின் ரெய்னா அரைசதம் அடித்ததோடு இந்த சீசனில் 300 ரன்களை கடந்து சாதித்துள்ளார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

ரெய்னா சாதனை :

இந்த போட்டியில் ரெய்னா 35 பந்தில் 52 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

ஐபிஎல் போட்டியில் இவர் அடிக்கும் 34வது அரைசதம் இதுவாகும். இந்த சீசனில் 3வது அரைசதம்.

எல்லா சீசனிலும் 300+ ரன்களை கடந்தவர் என்ற பெருமையை ரெய்னா மட்டும் பெற்றுள்ளார். தற்போது நடக்கும் 11வது சீசன் வரை 11 முறை 300 ரன்களை கடந்துள்ளார்.

கோலி, தோனி போன்ற ஸ்டார் வீரர்கள் கூட இந்த சாதனையை படைக்கவில்லை என்பது ரெய்னா செய்த சாதனையின் சிறப்பாக உள்ளது.
ஐபிஎல் சாதனை ஏராளம் இருக்கலாம் அதில் சுரேஷ் ரெய்னாவின் சாதனை இது ஐபிஎல் சாதனை ஏராளம் இருக்கலாம் அதில் சுரேஷ் ரெய்னாவின் சாதனை இது Reviewed by Vanni Express News on 5/11/2018 11:27:00 PM Rating: 5