ராஜஸ்தானை வீழ்த்தி Qualifier க்கு முன்னேறியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயசுழற்சியை வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. 

கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்றது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரி ஆர்ச்சர், பென் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 170 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

ஒரு கட்டத்தில் 2 ஓவரில் 40 ஓட்டங்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவைப்பட்டது. இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

கொல்கத்தா அணி சார்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது.
ராஜஸ்தானை வீழ்த்தி Qualifier க்கு முன்னேறியது கொல்கத்தா ராஜஸ்தானை வீழ்த்தி Qualifier க்கு முன்னேறியது கொல்கத்தா Reviewed by Vanni Express News on 5/24/2018 10:58:00 PM Rating: 5