ஐ.பி.எல் தொடரில் 2008 முதல் 2018 இதுவரை கோப்பை வென்ற அணிகள்!

இந்த ஆண்டு ஐபிஎல்., தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதில் முதியோர் அணி கேலி செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்று மூன்றாவது முறையாக சாம்பியனானது. இந்நிலையில் கடந்த 2008 முதல் இதுவரை சாம்பியனான அணிகளின் மொத்த பட்டியலை பார்க்கலாம். 

2008 (ராஜஸ்தான் ராயல்ஸ்) 

முதல் முறையாக நடந்த ஐபிஎல்., தொடரின் ஃபைனலில் சென்னை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. 

2009 (டெக்கான் சார்ஜர்ஸ்) 

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஐபிஎல்., தொடரின், ஃபைனலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை 6 ரன்களில் வீழ்த்தியது. 

2010 (சென்னை சூப்பர் கிங்ஸ்) 

கடந்த 2010 ஐபிஎல். தொடரின் ஃபைனலில், மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனானது.

2011 (சென்னை சூப்பர் கிங்ஸ்) 

2011 ஃபைனலில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி வெற்றிகரமாக கோப்பையை தக்கவைத்தது. 

2012 (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 

2012 ஃபைனலில் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னையின் ஹாட்ரிக் கனவை தகர்த்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 

2013 (மும்பை இந்தியன்ஸ்) 

2013 ஐபிஎல்., தொடரில் மீண்டும் ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறை கோப்பை வென்றது. 

2014 (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 

கடந்த 2014ல் காம்பிர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது கோப்பையை வென்றது. 

2015 (மும்பை இந்தியன்ஸ்) 

2015ல் மீண்டும் ஃபைனலுக்கு தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 

2016 (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) 

கடந்த 2016ல் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் தடவை கோப்பை வென்றது. 

2017 (மும்பை இந்தியன்ஸ்)

ஹைதராபாத்தில் நடந்த ஃபைனலில், ரைசிங் புனே சூப்பஜெயிண்ட் அணியை வீழ்த்திய மும்பை அணி, ஐபிஎல்., தொடரில் மூன்றாவது முறையாக கோப்பை வென்ற முதல் அணியானது. 

2018 (சென்னை சூப்பர் கிங்ஸ்) 

இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பை வென்று சாதித்தது.
ஐ.பி.எல் தொடரில் 2008 முதல் 2018 இதுவரை கோப்பை வென்ற அணிகள்! ஐ.பி.எல் தொடரில் 2008 முதல் 2018 இதுவரை கோப்பை வென்ற அணிகள்! Reviewed by Vanni Express News on 5/29/2018 11:52:00 PM Rating: 5