இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்

இலங்கை அணியின் வீரர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி வீரர்களில் வேதன உயர்வு 30 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைத்த சிறந்த வருமானம் கிடைத்ததன் பலனாக இந்த வேதன உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2018-2019ம் ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் படி 33 வீரர்களுக்கு குறித்த வேதன உயர்வு, A,B,C,D மற்றும் பிரீமியம் என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக வழங்கப்படவுள்ளது.

இதில் ஏ பிரிவில் இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 தலைவர் மெத்தியூஸ், டெஸ்ட் தலைவர் சந்திமால், சுராங்க லக்மால், ரங்கன ஹேரத் மற்றும் திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த லசித் மாலிங்கவுக்கு கடந்த வருடம் ஒப்பந்தம் வழங்காமல் புறக்கணித்த கிரிக்கெட் சபை அவரை இம்முறையும் ஒப்பந்தத்தில் இணைக்கவில்லை. குறித்த விடயம் தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

ஒப்பந்த விபரம்

A – எஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், திமுத் கருணாரத்ன, சுராங்க லக்மால்

B – உபுல் தரங்க, டில்ருவான் பெரேரா

C – குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா, தனஞ்சய டி சில்வா, குசால் பெரேரா

D – அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, அசேல குணரத்ன, தனுஷ்க குணதிலக, நுவான் பிரதீப்

Premier Category – சதீர சமரவிக்ரம, ரொஷேன் சில்வா, லஹிரு திரிமான்னே, லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், ஜெப்ரி வெண்டர்சே, தசுன் சானக, கௌசல் சில்வா, செஹான் மதுசங்க, லஹிரு குமார, மலிந்த புஷ்பகுமார, அமில அபோன்ஷோ, வனிது ஹசரங்க, இசுரு உதான, டில்ஷான் முனவீர
இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம் இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம் Reviewed by Vanni Express News on 5/24/2018 12:36:00 AM Rating: 5