வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாறு அழைப்பு

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாறு யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். 

யாழில் சிங்கள டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்ளும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். 

வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள், நல்லவர்கள். எனினும் கடந்த 30 வருட யுத்தம் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது. எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்அபிப்பிராயம் கொணெடவர்களாக இருக்கிறார்கள். 

30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள் பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள். 

எனவே தற்போதைய இளைஞர் யுவதிகளுக்கும் நான் ஒன்றை கூற வருகிறேன். இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள் இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். 

எனவே வடக்கு இளைஞர்களையும் இராணுவத்தில் இணைந்து இந்த நாட்டிற்கு சேவையாற்ற முன்வருமாறு அழைப்பு விடுவதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி அழைப்பு விடுத்தார்
வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாறு அழைப்பு வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாறு அழைப்பு Reviewed by Vanni Express News on 5/12/2018 05:01:00 PM Rating: 5