கிங் ஓயவில் பாய்ந்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

லுனுவில பாலத்தில் இருந்து கிங் ஓயவில் பாய்ந்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனுடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த மாணவனுடைய சடலம் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் நைனாமடம் கிங் ஓய பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பண்டிருப்பு பீரிஸ் தோட்டப் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ரதுகமகே மதுஷ தில்சான் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

குறித்த மாணவன் வென்னப்புவ சாந்த ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கடந்த 22 ஆம் திகதி பாடசாலை விட்டு வீட்டுற்கு செல்லும் வழியில் லுனுவில பாலத்திற்கு அருகில் தனது நண்பர்கள் இருவரிடம் தனது கையடக்க தொலைபேசியை கொடுத்து விட்ட வினோதத்திற்காக கிங் ஓயவில் குறித்த மாணவன் குதித்த நிலையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மீட்கப்பட்ட மாணவனின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிங் ஓயவில் பாய்ந்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு கிங் ஓயவில் பாய்ந்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 5/24/2018 03:00:00 PM Rating: 5