கோர என்ற மோப்பநாய் திடீர் மரணம்

-க.கிஷாந்தன்

ஹட்டன் பொலிஸ் வலையத்தின் மோப்பநாய் பிரிவில் இருந்த கோர என்ற மோப்பநாய் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

08 வயதினை கொண்ட கோரா மோப்பநாய் கடந்த மூன்று வருடங்களாக  ட்டன் பொலிஸ் வலையத்தில் சேவை புரிந்துள்ளதாகவும்,  சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போது சட்டவிரோதமாக கொண்டு வரபட்ட போதை பொருளை இனங்கண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த கோரா என்ற பொலிஸ் மோப்பநாய மத்திய மாகாணத்தின் உள்ள மோப்பநாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பயிற்சி ஒன்றிற்க்காக அழைத்து சென்ற போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இந்த மோப்பநாய் அம்பாறை, மட்டகளப்பு,  பண்டாரவளை ஆகிய பொலிஸ் நிலைய பிரதேசங்களில் சேவைபுரிந்த கோர என்ற மோப்பநாய் இறுதியாக ட்டன் தலைமை பொலிஸ் நிலையத்தில் 03 வருடங்களாக சேவை புரிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கோர என்ற மோப்பநாய் திடீர் மரணம் கோர என்ற மோப்பநாய் திடீர் மரணம் Reviewed by Vanni Express News on 5/29/2018 05:33:00 PM Rating: 5