17 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மாத்திரைகள் மீட்பு

கொழும்பு பொது அஞ்சல் அலுவலகத்தின், வெளிநாட்டு தபால் பொதிகள் பரிவர்த்தனை பிரிவில் மெத்தாம்பெடாமைன் (Methamphetamine) என்ற ஒருவகை போதைப்பொருள் மாத்திரைகள் 500 அடங்கிய பொதி ஒன்றை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

நேற்றிரவு (01) 11.30 மணியளவில் இந்த போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதி மீட்கப்பட்டதாகவும் அதன் நிறை 250 கிராம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் பெறுமதி சுமார் 17 இலட்சம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஜேர்மனியில் இருந்து துன்கஹ பகுதியில் உள்ள ஆண் ஒருவருக்கே இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த பொதியை பெற்றுக்கொள்ள குறித்த நபர் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்டுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.17 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மாத்திரைகள் மீட்பு (படங்கள்)
17 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மாத்திரைகள் மீட்பு 17 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மாத்திரைகள் மீட்பு Reviewed by Vanni Express News on 5/02/2018 03:07:00 PM Rating: 5