யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம் - கவலையில் பொதுமக்கள்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர் ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்பெற்றுச் செல்வது பெரும் கவலையளிப்பதாக பொதுமக்களும், சமூக அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. 
யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம் - கவலையில் பொதுமக்கள் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம் - கவலையில் பொதுமக்கள் Reviewed by Vanni Express News on 5/11/2018 11:38:00 PM Rating: 5