கல்வியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-Isfan Fareed

1975ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டியில் பிறந்தவர்களால் உருவாக்கப்பட்ட Everest Friends Association அமைப்பினால்கௌரவிப்பு நிகழ்வு

கல்விக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிகளையும் கல்வியில் சாதித்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வருடா வருடம் அமைப்பினால் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கா.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் 7A களுக்கு அதிகமாகப் பெற்று சித்தயடைந்த மாணவர்களையும், அத்தோடு க.பொ.த(உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களும்பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.

Everest Friends Association அமைப்பின் தலைவர் டாக்டர்.அஸ்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு 2018.05.05 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு எருக்கிலம்பட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் தபால் தொடர்பு, ஊடக, இராஜாங்க வீடமைப்பு அமைச்சருமாகிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களும், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான பிரதம பேச்சாளராக பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும், மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கலாநிதி ஹூசையின் இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

மேலும்எருக்கலம்பிட்டி பள்ளி பரிபாலனசபைத் தலைவர் சட்டத்தரனி சபூர்தீன் உட்பட இன்னும் பல கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்வியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு Reviewed by Vanni Express News on 5/02/2018 05:12:00 PM Rating: 5